சிவில் அணு சக்தி ஒப்பந்தம்- இந்தியா, ரஷ்யா கையெழுத்திட்டன

அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட இது சிறந்தது என்று இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அவருக்கு அதிபர் மெட்வதேவ் விருந்து அளித்தார். மாஸ்கோ புறநகர் பகுதியான பார்விகாவில் உள்ள அதிபர் வீட்டில் இந்த விருந்து நடந்தது.
விருந்து நிகழ்ச்சியில் மெட்வதேவ் கூறும்போது, ரஷியாவும், இந்தியாவும் மிகவும் நட்பு நாடாக உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் அலுவல் ரீதியாக மட்டும் அல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசுவதற்கு ஆசைப்படுகிறேன் என்றார்.
பதிலுக்குப் பிரதமர் மன்மோகன்சிங் கூறும்போது இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே உயர்ந்த நட்பு உள்ளது. அதுவும் மெட்வதேவ் அதிபராக இருக்கும் இந்த நேரத்தில் நட்பு மேலும் வலுவாகி இருக்கிறது.
இந்தியாவுக்கு மற்ற நாடுகளுடன் இருக்கும் நட்பை விட ரஷியாவுடன் இருக்கும் நட்பு மிகச் சிறந்த நட்பாகும். இந்த நட்பு எப்போதும் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
இன்று மன்மோகன் சிங்கும், மெட்வதேவும் மீண்டும் சந்தித்து பேசுசினர். அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே சிவில் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங்கும், மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.
அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் சிறந்ததாக வர்ணிக்கப்படுகிறது.
அணு தொழில்நுட்ப மாற்றம், தடையில்லா யுரேனியம் சப்ளை உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
இந்த ஒப்பந்தம் தவிர பாதுகாப்புத் துறை தொடர்பான 3 ஒப்பந்தங்களும் கூட இன்று கையெழுத்தாகின.
இதையடுத்து சிங்கும், மெத்வதேவும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மன்மோகன் சிங் கூறுகையில், இன்று இரு நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது மிகவும் விசாலமானது என்றார் சிங்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் புதினை சந்திக்கிறார் மன்மோகன் சிங். முன்பு அதிபராக இருந்தபோது புதினை அவர் சந்தித்துள்ளார். தற்போது பிரதமராக அவரை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications