கல்பாக்கம், ஏர்போர்ட்டில் 24 மணிநேர உஷார் நிலை அமல்
சென்னை: சென்னையில் விமான நிலையம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர் உச்சக்கட்ட பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்சம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருக்கும் சமயத்தில், அதே எண்ணிக்கையிலான போலீசார் அவசரகால நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே எண்ணிக்கையிலான போலீசார் ஓய்விலும் இருப்பர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் சமயத்தில் 3 பிரிவு போலீசாரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்குவார்கள்.
வழக்கமாக, டிசம்பர் 6, 26/11 போன்ற குறிப்பிட்ட நாட்கள் மற்றும் அசம்பாவித சமயங்களில் கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்படுவார்கள். தற்போது இதுபோன்ற நாட்கள் அதிகரிப்பதுடன், அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் போன்ற சம்பவங்களும் நிகழந்து கிட்டதட்ட எப்போது கூடுதல் பாதுகாப்புப் படையினருக்கு வேலை இருந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக விமான நிலையங்கள் இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்கின்றன. இதற்கிடையே, சென்னை விமான நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு, உச்சக்கட்ட பாதுகாப்பு போடுவதற்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதனால், கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும், சாதாரண நபர்கள் நுழைந்து விடாதபடி தொடர் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கத்தை விட 2 மடங்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
கடல் வழி அச்சுறுத்தலை சமாளிக்கும் பொறுப்பில் சிறப்பு அதிவேக படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications