நம்பர் 1: கிரிக்கெட் அணிக்கு லோக்சபாவில் பாராட்டு
டெல்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதோடு, டெஸ்ட் தரிவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இன்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதோடு, ஐசிசி ரேங்கிங்கில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வாழ்த்துச் செய்தியை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அவையில் வாசித்தார்.
ஆளுக்கு ரூ. 25 லட்சம்...
இதற்கிடையே, முதலிடத்தைப் பிடித்ததைப் பாராட்டும் வகையில், இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மழை வெள்ளம், வறட்சி, பஞ்சம், பட்டினி போன்ற சம்பவங்களின்போது இப்படியெல்லாம் பணத்தை உடனே அள்ளி விடாது கிரிக்கெட் வாரியம். ஆனால் இந்திய அணியினர் ஏதாவது செய்து விட்டால் உடனே பரிசு மழையைப் பொழிந்து தள்ளி விடும் கிரிக்கெட் வாரியம்.
இதனை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அந்த அடிப்படையில் தற்போது டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணியைக் கெளரவிக்கும் வகையில் வீரர்கள், அணி ஊழியர்கள், தேர்வுக் குழுவினருக்குப் பரிசு மழையைப் பொழிந்துள்ளது.
வீரர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும், ஊழியர்கள், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ. 10 லட்சும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோணிதான் பெஸ்ட் - ஸ்ரீகாந்த்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் டோணிதான் இதுவரை இருந்த கேப்டன்களிலேயே சிறந்தவர் என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் பெரிய அடியாக அடித்துள்ளார்.
இவர், ஷேவாக் டபுள் செஞ்சுரி போட்டபோது பெவிலியனில் இருந்தபடி வாயில் விரலை வைத்து விசிலடித்து குஷியாக ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், டோனி சிறந்த கேப்டன் ஆவார். உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்ததற்காக அவரையும், அவரது அணி வீரர்களையும் வாழ்த்துகிறேன். இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார் என்றார்.
கவாஸ்கர் கூறுகையில், இந்திய வீரர்களின் கடினமான உழைப் பால் நம்பர்-1 இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதை தக்க வைக்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். ஏனென்றால் மற்ற அணிகள் அந்த இடத்தை பிடிக்க வெகு அருகில் உள்ளன. இந்திய வீரர்கள் திறமையானவர்கள். அதை வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஆனால் எப்போதுமே 100 சதவீத திறனை வெளிப்படுத்த முடியாது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications