வங்கக் கடலில் மீண்டும் புயல் சின்னம்

இதனால் தமிழகம், புதுவையில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இலங்கைக்கு கிழக்கே ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தற்போது மேற்கு வடமேற்காக நகர்ந்து தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மீண்டும் நாளைமுதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். இன்று தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
சென்னையை பொறுத்தளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடித்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி, தென்காசி ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications
