இளங்கோவனை கண்டித்து கோபியில் வீடுவீடாக நோட்டீஸ்
கோபி: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதால் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் இளங்கோவன் ஈரோட்டில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை அகற்றும் போராட்டம் நடத்தினார். காங்கிரசார் பிரபாகரன் படத்துடன் வைக்கப்பட்டிருந்த தட்டி போர்டுகளை அகற்றி கிழித்தெறிந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று மாலை சிலர் வீடு வீடாக சென்று சில துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். வர்த்தக நிறுவனங்கள், கடைகளிலும் வினியோகம் செய்துள்ளனர்.
அந்த துண்டு பிரசுரத்தில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கைது செய்யக்கோரியும், அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்த துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். அதில் அச்சக பெயரோ, போராட்டக்காரர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்தவர்களை தேடி வருகின்றனர்.
ஜாமீன் மனு நிராகரிப்பு:
இந் நிலையில் சென்னையில் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் வீடு தாக்கப்பட்ட வழக்கில் கைதான நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த 6 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை செசன்ஸ் கோர்ட் நிராகரித்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications