மருத்துவமனையில் மாயமான நர்சிங் மாணவி காதலனுடன் மீட்பு
சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான நர்ஸ் பயிற்சி மாணவி, காதலனுடன் மீட்கப்பட்டார்.
திருநெல்வேலி, சங்கரன்கோவிலைச் சேர்ந்த பெண் சமுத்திரம் (18). இவர் சென்னையில் நர்ஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 29ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் பயிற்சியி்ல் இருந்தபோது திடீரென மாயமான முறையில் காணாமல்போனார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமுத்திரம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்றபோது, சமுத்திரம் அங்கு திருமணமான நிலையில் இருப்பதாக கூறினார். அவரை போலீசார் ஜி.டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மருத்துவமனையில் இருந்து மாயமானது குறித்து சமுத்திரம் கூறுகையில், 'நான் நர்சிங் பயிற்சிக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது ஒரு வார்டில் அஞ்சலை என்ற பெண் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அஞ்சலையுடன் அவரது மகன் ராமு (24) என்பவரும் தங்கியிருந்தார்.
தொடர்ந்து நாங்கள் இருவரும் சந்தித்ததால் காதல் மலர்ந்தது. காதலை யாரும் பிரிக்கக் கூடாது என்பதற்காக 29ம் தேதி, ராமுவின் ஊரான திருப்பத்தூருக்கு சென்று விட்டோம். பின்னர் அங்கு உள்ள மலைக்கோவிலில் வைத்து நாங்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்.
நான் தொடர்ந்து நர்சிங் பயிற்சியை படிக்கப்போகிறேன். 1 வருடத்திற்கு பிறகு ராமுவை முறைப்படி திருமணம் செய்து கொள்வேன்' என்று போலீசிடம் கூறியுள்ளார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications