வங்கக் கடலில் புயல் சின்னம் - நாகை, சென்னை, கடலூர் துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு
Subscribe to Oneindia Tamil

வங்கக் கடலில் தென் மேற்குப் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. அது வலுப் பெற்று நாகைக்கு தென் கிழக்கில் 750 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து, மேற்கு வட மேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரைப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னத்தையடுத்து சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கைக் கூண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல பாம்பன், புதுச்சேரி, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications