முத்துக்குமரன் பிறந்த மண்ணில் திமுகவுக்குத் தோல்வியைத் தாருங்கள் - வைகோ
திருச்செந்தூர்: இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது மத்திய அரசு. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது. இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அம்மன் நாராயணனை ஆதரித்து வைகோ பிரசாரத்தில் குதித்துள்ளார்.
ஆத்தூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கருணாநிதி அரசாங்கத்தில் செயல்பாடுகள் சரியில்லை. ஜனநாயகம் மாறி பனநாயகமாக இருந்து வருகிறது.
இத்தொகுதியில் அமைச்சராக இருந்து செயல்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது சுயலாபத்திற்காக அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்துள்ளார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கு நஷ்டம்? பொதுமக்களின் வரிப் பணம்தான் வீனாகிறது.
மத்திய அரசு இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது. இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். திமுகவினர் தற்போது தோல்வி பயத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அராஜகத்தை மீறி அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். இடைத் தேர்தல் வெற்றியை பொதுமக்கள் அதிமுகவிற்கு அளித்தால் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மாற்றம் ஏற்படும். அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் வைகோ.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications