பெண் கடத்தல்: காங்கிரஸ் பிரமுகர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இளம் பெண்ணை கடத்தி மறைத்து வைத்ததாகவும், பெண்ணை மானபங்கப்படுத்தியதாகவும் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளியந்தோப்பு 4வது கிழக்கு தெருவை சேர்ந்த தாமஸ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் பவானி (19).

பவானிக்கும் பெற்றோருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் அவர் வீட்டின் சொத்து பத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினார் பவானி.

இதுபற்றி தாமஸ் கடந்த மாதம் புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பவானியை தேடி வந்தனர்.

இந் நிலையில் பவானி புளியந்தோப்பை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், ராகுல் ராஜீவ்காந்தி பேரவை நிறுவனருமான நாகராஜ் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

இந் நிலையில் நாகராஜ், தாமசின் அக்காள் புஷ்பா வீட்டுக்குச் சென்று பவானிக்கு சொத்தை பிரித்து கொடுக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார்.

அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதில் புஷ்பாவின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார் நாகராஜ்.

இதுகுறித்தும் போலீசில் புகார் தரப்பட்டதையடுத்து போலீசார் நாகராஜ் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்து, பவானியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இளம் பெண்ணை கடத்தி மறைத்து வைத்ததாகவும், பெண்ணை மானபங்கப்படுத்தியதாகவும் நாகராஜ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+