தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் பகல் 11.30 மணியளவில் கடற்படை கப்பலில் இருந்து சுமார் 350 கி.மீ தூரத்திற்கு தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக இயக்கிப் பார்க்கப்பட்டது. தரையில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் பிருத்வி ஏவுகணைகளைப் போல, கடற்படைக்காக உருவாக்கப்பட்டது தனுஷ் ஏவுகணை.
500 கிலோ அளவுக்கு அணு ஆயுதம் மற்றும் வெடி குண்டுகளை தாங்கிச் சென்று கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் உள்ள நில இலக்கை தாக்கும் திறன் கொண்டது தனுஷ். கப்பலில் இருந்து கப்பல்களையும், கப்பலில் இருந்து தரையில் உள்ள இலக்கையும் இதனால் தாக்க முடியும்.
இந்திய ராணுவ தளவாடங்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2000ம் ஆண்டில் முதல் சோதனை செய்யப்பட்டபோது தொழில்நுட்பக் காரணமாக தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பல்வேறு சோதனைகளிலும் தனுஷ் சோதனை வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications