தமிழகத்தில் 1000 வக்கீல்களின் அங்கீகாரம் பறிபோகும் அபாயம்!

இதுகுறித்து பார் கவுன்சில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், கிட்டத்தட்ட 1000 வக்கீல்கள், முறையாக முதுநிலைப் படிப்பை படிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளனர். பின்னர் வக்கீலுக்குப் படித்துள்ளனர். இப்படிப்பட்ட வக்கீல்கள் தங்களது வக்கீல் பதிவு சான்றிதழை திரும்பத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் வக்கீல் பதிவும் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என்றார்.
இதுதவிர திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை டிகிரி முடித்து விட்டு வக்கீலுக்குப் படித்த வக்கீல்களை அடையாளம் காணும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
இவர்களில் சிலருக்கு வக்கீல் பதிவை ரத்து செய்வது தொடர்பான கடிதமும் அனுப்பப்பட்டு விட்டதாம்.
அடிப்படை பட்டப்படிப்பை முடிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் முது நிலைப் படிப்பை முடித்தவர்கள் பி.எல். படித்திருந்தால், அவர்கள் வக்கீல் பணியாற்ற முடியாது என்று கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
12 ஆண்டு பள்ளிப் படிப்பு, அடிப்படை பட்டப் படிப்பு ஆகியவற்றை முறையாக படித்தவர்கள் மட்டுமே பி.எல். முடித்திருந்தால் வக்கீலாகப் பணியாற்ற முடியும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பான அப்பீல் மனுக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்பை முடித்து விட்டு வக்கீலாகப் பணியாற்றுவோரின் பதிவை ரத்து செய்யும் பணியில் பார் கவுன்சில் இறங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications