சீனாவில் 1 பில்லியன் இரும்பு தாது-இந்தியா ஷாக்!

இதனால் இந்தியாவுக்கு என்ன கலவரம்?
இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே.
சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம்.
100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை தோண்டியெடுக்கும் பணி விரைவில துவங்க உள்ளது.
சீனாவைப் பொறுத்தவரை இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது. காரணம், இரும்புத் தேவை அந்நாட்டுக்கு மிக அதிகம். ஆனால் அதைச் சமாளிக்கும் அளவு இருப்பு அவர்களிடம் இல்லாமல் இருந்தது. இதனால் பெருமளவு இரும்புத் தாதுவை இந்தியாவிடமிருந்தும், லத்தீன் அமெரிக்க நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்துவந்தது.
ஏராளமாக இறக்குமதி செய்வதால், தங்களுக்கு சிறப்புச் சலுகை வேண்டும் என சமீபத்தில்தான் வெனிசூலா நிறுவனத்துடன் தனி ஒப்பந்தமே போட்டது சீனாவின் 'வோன் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனம்'.
இப்போது இந்த புதிய கண்டுபிடிப்பால், தனது இரும்புத் தாது இறக்குமதியை பாதிக்கும் மேல் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது சீனா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications