டெல்லியில் மீனவர் போராட்டம் ஒத்திவைப்பு
நாகப்பட்டினம்: மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள மீன்பிடி சட்டமசோதாவை கண்டித்து டெல்லியில் நடத்த திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தெரிவித்தார்.
கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாக பல்வேறு கடுமையான நிபந்தணைகள் மற்றும் தண்டனைகள் கொண்ட சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எழுந்தது. குறிப்பாக இலங்கைக்கு அருகே உள்ள தமிழகத்தில் இந்த மசோதாவுக்கு தமிழக மீனவர்கள் இடையே கடும் எதி்ர்ப்பு எழுந்தது.
கடலோர மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இதுபற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை இம்முயற்சியை நிறுத்திவைக்குமாறும் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
மீன்பிடி ஒழுங்கு முறை மசோதாவை, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 17ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த தமிழ்நாடு மீனவர் பேரவை திட்டமிட்டிருந்தது.
மத்திய அரசின் முடிவால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மீனவர் பேரவை அறிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் கூறுகையில்,
'போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடக்கவுள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்திற்கு பின்பு, அந்த சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும். மீனவ கிராமங்களிடையே பிரிவினையை தூண்டுபவர்களின் சதிக்கு மீனவர்கள் ஆளாகக் கூடாது' என்றார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications