தேவநாதனுக்கு விஐபிக்களுடன் தொடர்பு-அரசு வக்கீல்

இவர் மட்டுமே தனியாக செல்போன் கேமரா மூலம் கருவறைக் காட்சிகளை படமெடுத்ததாக முதலி்ல கூறப்பட்டது. ஆனால் பின்புலத்தில் பலர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது தேவநாதனுக்கு சில விஐபி பிரமுகர்களின் தொடர்பு இருப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் பாஸ்கர் கூறுகையில்,
நேற்று அர்ச்சகர் தேவநாதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. ஆனால் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் வாரண்ட்' மூலம் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதால் அவர் ஜாமீன் மனு விசாரணை தகுதி இழந்து விட்டது. இதுவரை தேவநாதன் தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கேட்கவில்லை.
சிவகாஞ்சி போலீஸ் விசாரணையில் இருந்த வழக்கு தற்போது மாவட்ட குற்றவியல் போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் பெரும் புள்ளிகள் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.டி. ஆதாரத்தை வைத்து பார்க்கும்போது அர்ச்சகர் தேவநாதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வியாபார நோக்கத்துடன் செயல்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. போலீசாரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என்றார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதனின் காவலை வாரண்ட் மூலம் காஞ்சிபுரம் நீதிபதி வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications