தெலுங்கானா- மத்திய அரசி்ன் 'டபுள் கேம்' ஆரம்பம்!

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherji
ஹைத​ரா​பாத்: தெலுங்கானா ஆதரவு-எதிர்ப்பு எம்எல்ஏக்களின் தொடர் அமளி காரணமாக ஆந்​தி​ர சட்​டசபை கால​வ​ரம்​பின்றி
ஒத்​தி​வைக்​கப்பட்டு​விட்ட நிலையில், மத்திய அரசு டபுள் கேமை ஆரம்பித்துள்ளது.

தெலுங்​கானா மாநி​லம் குறித்து ஆந்​தி​ரப் பேர​வை​யில்
தீர்​மா​னம் நிறை​வேற்​றிய பிறகே நாடா​ளு​மன்​றத்​தில் அது குறித்து விவா​திக்க முடி​யும் என்று மத்​திய நிதி​ய​மைச்​சர் பிர​ணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தெலுங்கானா விவகாரத்தை சில காலம் கிடப்பில் போட மத்திய அரசு முயல்வது தெரிகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை, ஐபி அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டு இப்போது தவித்து வருகிறது மத்திய அரசு.

ஆந்​தி​ரத்​தின் சட்டசபையும் சட்ட மேலவையும் ஒரே
சம​யத்​தில் கால​வ​ரம்​பின்றி ஒத்​தி​வைக்​கப்​பட்டுள்ளதால் அங்கு தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக இப்போதைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித்தான் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்றும் இல்லை. அரசியல் சட்டத்தின் 3வது பிரிவின்படி குடியரசுத் தலைவரே இது தொடர்பாக ஆணையை பிறப்பிக்கலாம். இதையடுத்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இது தொடர்பாக சட்டம் இயற்றலாம்.

ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்பது பிரணாப் முகர்ஜியின் பேச்சு மூலம் உறுதியாகிறது.

கட​லோர ஆந்​தி​ரம் மற்​றும் ராய​ல​சீமா பகு​தி​யில் இருந்து வந்த தெலுங்கானா எதிர்ப்பு எம்பிக்கள் குழு​வி​ன​ரி​டம் பேசிய பிர​ணாப், தெலுங்​கானா மாநி​லம் குறித்து ஆந்​தி​ரப் பேர​வை​யில்
தீர்​மா​னம் நிறை​வேற்​றிய பிறகே நாடா​ளு​மன்​றத்​தில் அது குறித்து விவா​திக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வன்முறை தொடர்கிறது:

இந் நிலையில் ஆந்திராவை இரண்டாக பிரிப்பதை கண்டித்து ராயலசீமா- கடலோர ஆந்திர பகுதிகளில் இன்று 5வது நாளாக பந்த்' நடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

பள்ளி-கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் பந்த்:

இந் நிலையில் தெலுங்கானாவுக்கு எதிராக திருப்பதி மலையிலும் இன்று பந்த் நடக்கிறது. திருமலையில் பந்த் நடத்த தடை உள்ள நிலையல் அதையும் மீறி இந்தப் போராட்டம் நடக்கிறது.

இதனால் அங்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாகனங்களும் இயங்காததால் திருமலைக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பதி கோவிலுக்கு வரும் கூட்டம் கடந்த 1 வாரமாகக் குறைந்துவிட்டதால் உண்டியல் வருமானம் பாதியாக குறைந்து விட்டது.

இந் நிலையில் திருப்பதியில் காங்கிரஸ் தொண்டர்கள் ரோட்டில் அங்கபிரதட்சண போராட்டமும் நடத்தினர். முக்கிய சாலைகளில் படுத்து உருண்டபடியே ஜெய் ஆந்திரா' என்று கோஷமிட்டனர்.

7 மாணவர் நிலைமை கவலைக்கிடம்:

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+