அதிபர் தேர்தல் -ராஜபக்சே, பொன்சேகா, சிவாஜிலிங்கம் வேட்பு மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே, பொன்சேகா, சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரத்னே உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 26ம் தேதி நடைபெறுகிறது. இதில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு டெபாசிட் கட்டும் பணி நடந்தது. நேற்றுடன் அது முடிவடைந்தது. அதன் இறுதியில், மொத்தம் 23 பேர் டெபாசிட் கட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று ராஜபக்சே, பொன்சேகா, சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் வேட்பு மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

முஸ்லிம் என்ற அடிப்படையில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்

ராஜபக்சே, பொன்சேகா உள்பட 18 பேர் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்ட ஐந்து பேர் சுயேச்சைகளாக போட்டியில் உள்ளனர்.

தனி ஈழ ஆதரவு சிங்கள இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணாரத்னேவும் போட்டியில் உள்ளார்.

வேட்பு மனு தாக்கலையொட்டி தேர்தல் தலைமையகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+