போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோவில் கடும் பூகம்பம்
மாட்ரிட்: போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ ஆகிய நாடுகளில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் இந்த நாடுகள் இன்று அதிகாலை பெரும் நடுக்கத்தை சந்தித்தன.
ஸ்பெயின் நாட்டின் பூகம்பவியல் கழகத்தின் பதிவுக் கருவியில் 6.3 ரிக்டராக இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தெரியவரவில்லை.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு தெற்கு போர்ச்சுகல்லின் கேப் செயின்ட் வின்சென்ட் பகுதியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், அட்லான்டிக் கடலில் பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்குள் 58 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது
இந்த பூகம்பத்தின் அளவு 5.7 ரிக்டர் என அமெரிக்க பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் 10 கிலோமீட்டர் ஆழத்தில்தான் பூகம்பம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் செவில்லி, கோர்டோபா, ஹுல்வா ஆகிய நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டது. பூகம்பத்தைத் தொடர்ந்து அவசர கால சேவையாளர்கள் முடுக்கி விடப்பட்டனர்.
போர்ச்சுகல் நாட்டின் தென் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அது உணரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications