ஐஜியைத் தொடர்ந்து திருச்செந்தூர் டிஎஸ்பி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: தென் மண்டல ஐஜியைத் தொடர்ந்து தற்போது திருச்செந்தூர் டி.எஸ்.பியையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் நடராஜமூர்த்தி. இவர் திடீர் என்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூருக்கு கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தென் மண்டல ஐஜியை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியது. தற்போது டி.எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications