தானேவில் ரயில் தடம் புரண்டது -சேவை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை அருகே உள்ள தானேவில் இன்று காலியாக சென்ற ரயில் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விட்டன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஏ.கே.ஜெயின் கூறுகையில், காலியாக சென்ற அந்த ரயில் கர்ஜாத் நோக்கி போய்க் கொண்டிருந்தபோது தடம் புரண்டது. இதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விட்டன.
இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து தானே - முலுந்த் இடையிலான ஸ்லோ லைனில் இயக்கப்பட்டு வந்த உள்ளூர் ரயில்கள் அதி வேக பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளன.
இந்த விபத்து காரணமாக அனைத்து ரயில்களும் அரை மணி நேரம் தாமதமாக ஓடுகின்றன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications