For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தலில் அன்பு வழியில் பணியாற்றுங்கள் - வெறி வேண்டாம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இடைத் தேர்தல் களத்தில் நிற்கும் இரு தரப்பினரும் (திமுக, அதிமுக) அமைதி வழியில், அன்பு வழியில் பணியாற்ற வேண்டும். மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தல்களில் தங்கள் தொகுதிகளின் சார்பில் சட்டமன்றத்துக்கு யாரை அனுப்பி வைப்பது என்ற பொறுப்பை ஏற்றுள்ள வாக்காளப் பெருமக்களுக்கு என் பணிவான வேண்டுகோளை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கமாக இடைத் தேர்தலில் ஏற்படும் வன்முறைகள் -வசைமாரிகள் இவையனைத்துக்கும் செவி சாய்க்காமல் -இப்போது களத்தில் நிற்கும் இருதரப்புப் பிரதான உடன்பிறப்புகள் - தோழர்கள்- பிரமுகர்கள் அமைதியான முறையில் வாக்கு சேகரித்து, எப்படியும் வென்றே தீரவேண்டும் என்று வெறிகொள்ளாமல்; ஜனநாயக ரீதியிலும், காந்தியடிகள் கடைப்பிடித்த அமைதி, அகிம்சா வழியிலும், பெரியார் வலியுறுத்திய மனித நேய உணர்வுடனும், அண்ணா, காமராஜர் ஆகியோர் விரும்பிய அறவழி -அன்பு வழியை மறந்துவிடாமலும் பணிபுரிந்து வெற்றியை ஈட்டி; நமது பண்பாட்டை நிலை நிறுத்திட வேண்டுகிறேன்.

எதிரும் புதிருமான இரு வரிசைகளில் இருப்போர் என்றைக்கும் என் உடன் பிறப்புக்கள் - ஒருவரையொருவர் தாக்கிப் பேசி தரக்குறைவான வார்த்தைகளை வீசிடும்போது; அதை சகோதரப் பாசத்துடன் சகித்துக் கொண்டு -இருவரில் ஒருவர் தோற்பினும் அது இனத்துக்குக் கிடைத்திடும் தோல்வியே என்றும் - களத்தில் தோற்காமல் நிற்கப்போவது கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் என்றும் கவனப்படுத்தி, மக்களுக்கான கழகப் பணியாற்றி வாழ்வின் உச்சியில் நிற்பவன் என்ற முறையில் அந்த உச்சியிலிருந்து உணர்வு கலந்து விடுக்கும் என் வேண்டுகோள் இதுதான்:

"இடைத் தேர்தலில் மோதும் இரு வரிசைகளில் ஜனநாயக மாமணிகள் கோக்கப்பட்டு உண்மையிலேயே கொள்கை உறுதியுடனும் -லட்சிய தாகத்துடனும் வெற்றிக் கேடயம் ஏந்தி வரும் கொள்கை வீரர் யார் -அவர் உலவும் கொள்கைப் பாசறை எது -என்பதையெல்லாம் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து - அவர்தம் கரங்களில் வெற்றிக் கனியைத் தரும்போது -அதைப் பெற்றுக் கொள்ள; தாள் பணிந்து கழக அணியினர் தயாராக இருக்கும்போது "உரியவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்ள உரிமையுண்டு'' என்பதை உணர்ந்து, அதற்கான ஆதரவை அளிப்பதுதான் அறநெறியாகும் என்பதையும் -அரசியலில் ஜனநாயக நெறி விரும்புவோரின் கட்டாயக் கடமை என்பதையும் கனிவுடன் நினைவுபடுத்தி -இன்றைய இடைத் தேர்தல்களில் பகலவனைக் கண்ட பனி போல பகை மாய்ந்து இருதரப்பினரும் ஜனநாயகக் கனியை மகிழ்ந்து சுவைத்திட வாக்காளப் பெருமக்கள் -வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் - கடமையாற்ற வாரீர் வாரீர் என்று கரம் கூப்பி அழைக்கின்றேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X