IT Jobs: நாளை காலையில் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL.. செம வாய்ப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (மே 23) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Chat Support பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட .ள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். கஸ்டமர் சப்போர்ட் ரோலில் கிளைன்ட் சர்வீஸ் ரெப்ரெஸ்சென்டேட்டிவ்வாக பணியாற்றி இருக்க வேண்டும்.
என்னென்ன திறமைகள் வேண்டும்
'போன் காண்டக்ட் ஹேண்ட்லிங்' ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். சாட் சப்போர்ட் புராசஸில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் மற்றும் பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்கும் திறமை இருக்க வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 'ஷிப்ட்' என்பது 24X7 என்ற முறையில் இருக்கும். ரோட்டேஷனல் முறையில் பணியாற்ற தயாராக வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
நாளை இண்டர்வியூ
தற்போதைய, அறிவிப்பில் பணிக்கான மாத சம்பளம் குறித்த அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ மே 23 (நாளை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூக்கான இடம்
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - Tower 4 at Elcot economic Zone, Sholinganallur Medavakkam High Road, Chennai 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது ஏதேனும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
லேப்டாப், பென் டிரைவ், எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்ப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications