ஹெட்லியின் விசா ஆவணங்கள் கிடைக்கவில்லை, ராணாவுடையது உள்ளது: அரசு
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சிக்கியுள்ள ராணாவின் விசா ஆவணங்கள் கிடைத்து விட்டது. ஆனால் ஹெட்லியின் ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராணாவும், ஹெட்லியும், மும்பை தாக்குதலுக்கு முன்னதாக கடந்த 2006ல் இருந்து 2008க்கு உள்ளிட்ட காலகட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பலமுறை வந்து சென்றுள்ளார்கள். அந்த பயணங்கள் எல்லாமே சதி திட்டத்துடன் தொடர்புடையவை. அதற்கான ஆதாரமாக அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரகம் அப்போது வழங்கிய விசா ஆவணங்கள் கருதப்பட்டன.
இந்நிலையில், ஹெட்லி மற்றும் ராணாவின் விசா ஆவணங்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து சிகாகோவில் உள்ள துணை தூதரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.
இந்நிலையில், 'ராணாவுடைய விசா ஆவணங்கள் கிடைத்து விட்டது. ஹெட்லியின் ஆவணங்களை தேடி வருகிறோம்' வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications