For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கங்கண சூரிய கிரகணம் - முழுத் தகவல்களுடன் கூடிய இணையதளம் தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 108 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தின்போது கங்கண சூரியகிரகணம் நிகழவுள்ளது. இதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சூரியகிரகணம் குறித்த உண்மைகளை விளக்குவதோடு அதுகுறித்து மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கைகளை புரிய வைக்கும் வகையிலும் இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. ரெப்யூட் இன்போடெக் மற்றும் என்டர்பிரைசஸ் நிறுவனம். இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் உதவி செய்துள்ளது.

இந்த இணையதளத்தின் முகவரி - www.pongaleclipse.com - என்பதாகும்.

இந்த இணையதளத்தில் வருடாந்திர சூரிய கிரகணம், சந்திர கிரகணம் குறித்த முழுத் தகவல்களும், அவை எப்போதெல்லாம் வருகின்றன என்பது குறித்தும் விரிவாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளதாக ரெப்யூட் நிறுவன நிர்வாக இயக்குநர் அகமது மீரான் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது வெளியில் செல்லக் கூடாது. சாப்பிடக் கூடாது, பிரசவம் நடக்கக் கூடாது என்ற மூட நம்பிக்கை நம்மிடையே உள்ளது. அது தவறு என்று மக்களை தெளிவுபடுத்தத்தான் இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.

இயற்கையின் அரிய, அற்புத நிகழ்வுகள்தான் இந்த கிரகணங்கள். அவற்றை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

க‌ங்​கண சூரிய கிர​க​ண‌ம் ...

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இது 108 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் இந்த கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம்.

சூரி​ய​னுக்​கும்,​​ பூமிக்​கும் இடையே சந்​தி​ரன் ஒரே நேர்க்​கோட்​டில் வரும்​போது சூரிய கிர​க​ணம் ஏற்​ப​டு​கி​றது.

சூரிய கிரகணத்தில் பல வகை உண்டு.​ முழு சூரிய கிர​க​ணம்,​​ பகுதி சூரிய கிர​க​ணம் மற்றும் கங்​கண சூரிய கிர​க​ணம் என்பதாகும்.

ஒரு இடத்​தில் தெரி​யும் சூரிய கிர​க​ணம்,​​ மீண்​டும் அதே இடத்​தில் ஏற்படுவது என்பது 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுமாம். அப்படிப்பட்ட கங்கண சூரிய கிரகணம் தற்போது 108 ஆண்டுகளுக்குப் பின்னர் கன்னியாகுமரியில் நிகழவுள்ளது.

சூரி​ய​னைச் சந்​தி​ரன் மறைக்​கும்​போது கிர​க​ணம் தெரி​யும். அப்போது சூரி​ய​னின் மையப் பகுதி முழு​வ​தும் மறைந்து, விளிம்பு பகு​தி​கள் மட்​டும் தெரி​வதே கங்​கண சூரிய கிர​க​ணம் என அழைக்​கப்​ப​டு​கி​றது.​ இதை ஒளிவட்ட சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள்.

முழு​மை​யான கங்​கண சூரிய கிர​க​ணம் ஏற்​ப​டும் பகு​தி​க​ளில்,​அழ​கிய தங்க நிற வளை​யம் போல்,​​ சூரி​யன் ஜொலிப்​ப​தைக் காண முடி​யும்.​ ஜன​வரி 15ம் தேதி தோன்​றும் சூரிய கிர​க​ணத்​தின்​போது,​​ தமிழ்​நாட்​டில் கன்​னி​யா​கு​மரி,​​ தூத்​துக்​குடி,​​ ராம​நா​த​பு​ரம் ஆகிய தென்​மா​வட்​டங்​க​ளில் இந்த முழு​மை​யான கங்​கண சூரிய கிர​க​ணத்​தைக் காண முடி​யும்.​

தமி​ழ​கத்​தின் பிற பகு​தி​க​ளி​லும் இத​னைக் காண​லாம்.​ எனி​னும் முழு​மை​யான வளை​யத்​தைக் காண முடி​யாது.​ சென்​னை​யில் 85 சத​வீ​தம் சூரிய வளை​யத்​தைக் காண​லாம்.​

முழு​மை​யான கங்​கண கிர​க​ணத்​தைக் கண்டு களிப்​ப​தற்​காக உல​கின் பல்​வேறு பகு​தி​களி​லி​ருந்​தும் ஆயி​ரக்​க​ணக்​கான ஆய்​வா​ளர்​கள் கன்​னி​யா​கு​மரி,​​ ராம​நா​த​பு​ரம் முத​லான பகு​தி​க​ளில் குவிய உள்​ள​னர்.​

மத்​திய அர​சின் தேசிய அறி​வி​யல் தொழில்​நுட்​பத் துறை மற்​றும் சென்னை பெரி​யார் அறி​வி​யல் தொழில்​நுட்ப மையம் சார்​பில் ஜன​வரி 14,15 மற்​றும் 16 ஆகிய 3 தினங்​கள் கன்​னி​யா​கு​ம​ரி​யில் சூரிய கிர​க​ணம் குறித்த பயிற்சி பட்​டறை நடை​பெற உள்​ளது.​

கங்​கண கிர​க​ணத்தை நேரில் கண்​டு​க​ளிக்க இந்த பயிற்சி பட்​ட​றை​யில் இந்​தி​யா​வின் அனைத்து மாநி​லங்​க​ளை​யும் சேர்ந்த 750 மாணவ,​​ மாண​வி​கள்,​​ 250 ஆசி​ரி​யர்​கள் பங்​கேற்க உள்​ள​னர்.​

மேலும் திருச்சி,​​ நாகப்​பட்​டி​னம்,​​ புதுக்​கோட்டை,​​ ராம​நா​த​பு​ரம் முத​லான மாவட்​டங்​க​ளி​லும் பெரி​யார் அறி​வி​யல் தொழில்​நுட்ப மையம் சார்​பில் பள்ளி மாண​வர்​க​ளுக்​கான சூரிய கிர​கண பயிற்சி பட்​ட​றை​கள் நடை​பெற உள்​ளன.​

தமிழ்​நாடு அறி​வி​யல் இயக்​கம் சார்​பில் கங்​கண சூரிய கிர​க​ணம் குறித்த விழிப்​பு​ணர்வு அறி​வி​யல் கலைப் பய​ணம் நடை​பெற உள்​ளது.​ பல்​வேறு மாவட்​டங்​க​ளி​லும் பள்ளி,​​ கல்​லூரி மாண​வர்​கள் மத்​தி​யி​லும்,​​ கிரா​மங்​க​ளி​லும் நடை​பெ​றும் இந்​தப் பிர​சா​ரப் பய​ணத்​தின்​போது,​​ சுமார் 1 லட்​சம் சூரிய கிர​க​ணக் கண்​ணா​டி​களை விநி​யோ​கிக்க அந்த அமைப்​பி​னர் திட்​ட​மிட்​டுள்​ள​னர்.​ இதன் மூலம் கிர​க​ணத்​தைப் பாது​காப்​பாக கண்​டு​க​ளிக்க முடி​யும்.​

மேலும் அறி​வி​யல் இயக்​கம் சார்​பில் ஜன​வரி 15ம் தேதி ராம​நா​த​பு​ரத்​தில் கங்​கண சூரிய கிர​க​ணத்தை கண்டு களிப்​ப​தற்​கான சிறப்பு ஏற்​பா​டு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.​ இதில்,​​ நாடு முழு​வ​தும் இருந்து அகில இந்​திய மக்​கள் அறி​வி​யல் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்த சுமார் 1000 அறி​வி​யல் ஆர்​வ​லர்​கள் பங்​கேற்க உள்​ள​னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X