சென்னை: கடல் வழியே ஊடுருவிய 5 'தீவிரவாதிகள்' கைது

தமிழகம் உள்பட நாடு முழுவதுமே கடலோரப் பாதுகாப்பு குறித்து அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து கடற்படையினரும் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரமாக இரவு பகலாக இந்த பயிற்சி நடந்து வருகிறது. இதையடுத்து சென்னையில் மட்டும் 30 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு-பகலாக வாகன சோதனைகள் நடந்து வருகின்றன.
அதே போல மாநிலம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றனர்.
இந் நிலையில் போலீசாரின் உஷார் நிலையை சோதனை செய்ய கடற்படையின் கமாண்டோக்கள் 5 பேர் இன்று சென்னை காசிமேடு கடற்கரைப் பகுதியில் அதிகாலையில் ஊடுருவினர்.
அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பும் இவ்வாறு 'ஊடுருவிய' கடற்படையினரை தமிழக போலீசார் வளைத்துப் பிடித்தது நினைவுகூறத்தக்கது.
மாமல்லபுரத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கம்..
இந் நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அருகே கடலோர கிராமத்தில் ஒரு ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. குடியிருப்புப் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் இறங்கியதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுவும் தீவிரவாதத்துக்கு எதிராக போலீஸார் நடத்தி வரும் மாநிலம் தழுவிய ஒத்திகையின் ஒரு பகுதியே என்று காவல்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications