மஹபூபா முக்திக்கு விசா வழங்க பாக். மறுப்பு

இஸ்லாமாபாத்தில் இம்மாத இறுதியில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பிய மஹபூபா, விசா கோரி பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் பாகிஸ்தானில் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு விசா தர பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தரப்பில் கூறுகையில், 2008ம் ஆண்டு மஹபூபா பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தபோது காஷ்மீரிலிருந்து வந்துள்ள எனது சகோதரி என்று அதிபர் ஆசிப் அலி சர்தாரி குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது சர்தாரி அரசு மஹபூபாவுக்கு விசா தர மறுத்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தானில் தற்போது அதிக அளவில் நடைபெறும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள், தீவிரவாதத் தாக்குதல்களைக் கருத்தில கொண்டே விசா மறுக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம் என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அங்கு செல்ல திட்டமிட்டிருந்த ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் தலைமையிலான குழுவினரும் தங்களது பாகிஸ்தான் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சர்தாரி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications