விசைத்தறி தொழிலாளர் ஸ்டிரைக் - ரூ. 7.5 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசை தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, விடுமுறை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15வது நாளாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரூ.7.5 கோடி ஜவுளி உற்பத்தி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை நகரங்களுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, பகுதிகளில் விசைத்தறி தொழில் அதிகம் நடக்கிறது.
இங்குள்ள சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் வேஷ்டி, சேலை, லுங்கி உற்பத்தி செய்யப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை ஓப்பந்த அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக் 10ம் தேதியுடன் இந்த ஓப்பந்தம் முடிவடைந்தது. இதையடுத்து 60 சதவீத ஊதிய உயர்வு, விடுமுறை சம்பளம், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 7ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரு்ம் பொருட்டு மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் 3 கட்ட பேச்சு வார்த்தையும் நடைபெற்றது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் விசைத்தறிகள் இயங்கவில்லை.
இதனால் நாள் ஓன்ருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி தடைப்பட்டுள்ளது. நேற்று வரை சுமார் ரூ.7.5 கோடி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications