பாகிஸ்தானுக்குத் தெரிவிக்காமல் உள்ளே புகுந்து தாக்கிய அமெரிக்க படைகள்!

இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
கடந்த 2003 மற்றும் 2008ம் ஆண்டுக்கு இடையில் பலமுறை இதுபோல பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கியுள்ளனர் அமெரிக்க வீரர்கள். பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்க சிறப்புப் படைப் பிரிவினர் மேற்கொள்வர்.
ஹெலிகாப்டரில் சென்ற இந்த வீ்ரர்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்குள்ள பழங்குடியினர் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு ஒருபோதும் அவர்கள் தெரிவித்ததில்லை. மிகவும் ரகசியமாக இதை வைத்திருந்தனர்.
இருப்பினும் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததை அமெரிக்கப் படைகள் பகிரங்கமாக கூறியபோது அதைக் கேட்டு பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கப் படையினர் பறந்தால் திருப்பித் தாக்குவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்தது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications