கடமை தவறிய 2 தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நரேஷ் குப்தா
சென்னை: தேர்தல் விதிகளை கடைப்பிடிக்காத 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் செயின்ட் மேரீஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் (எண்.17), உரிய ஆவணங்களின்றி 5 பேர் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வாக்குப்பதிவை கையாள போதிய பயிற்சி அளிக்கப்பட்டும், வாக்குப்பதிவு அலுவலர் (2), புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த விவரங்களை 17ஏ' பதிவேட்டில் குறிப்பிடாவிட்டால், வாக்குச்சாவடி தலைமை அதிகாரி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் ஆகியோர் அலட்சியமாக இருந்ததாகக் கருதி அவர்கள் இருவர் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், இடைத்தேர்தலின்போது பணியை சரிவர செய்யாத, மேற்கண்ட வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஆகிய இருவர் மீதும் அவர்கள் பணிபுரியும் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications