செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனுக்கு ஆண்மைத்தன்மை பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: கோயில் கருவறையில் காமக்களியாட்டங்கள் நடத்தி கைதான அர்ச்சகர் தேவநாதனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் செக்ஸ் லீலைகளை நடத்தி கைதான அர்ச்சகர் தேவநாதன் மீதான வழக்கு விசாரணை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அர்ச்சகருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படும் 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கோவிலுக்கு அருகில் உள்ள கடைக்காரர்கள், அர்ச்சகரின் உறவினர்கள் என இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அர்ச்சகர் தேவநாதனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் காலை 11மணியளவில் அர்ச்சகர் தேவநாதன் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கடந்த முறை காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு தேவநாதன் அழைத்து வரப்பட்டபோது அவருக்கு எதிராக பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவநாதன் மீது செருப்பு, துடைப்பம் போன்றவற்றை வீசி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், அரசு மருத்துவமனைக்கு தேவநாதன் அழைத்து வரப்பட்ட தகவலை போலீசார் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.

மருத்துவமனையில் 2மணி நேரம் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆண்மை பரிசோதனை விவரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+