கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்தியதாக ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சேலத்தை சேர்ந்த என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களான சுயம்புராஜன், மோகன் உள்ளிட்டோர் காரில் சபரி்மலை யாத்திரை புறப்பட்டனர். கன்னியாகுமரிக்கு காரில் சென்றுவிட்டு பழவூர் வழியே வந்து கொண்டிருந்தது. சேலத்தை சேர்ந்த சரவணன் காரை ஓட்டினார்.
அப்போது குன்னூர் வெலிங்டனை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விவேக் கேயால், ராமசந்திரன் கேஸ்திரி உள்ளிட்டோர் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
ராமச்சந்திரன் கேஸ்திரி வந்த கார் மீது கல்லூரி மாணவர்கள் வந்த கார் எதிர்பாராத விதமாக உரசி விட்டது. இருப்பினும் கார் நிற்காமல் போய் விட்டது.
இதையடுத்து இரு ராணுவ அதிகாரிகளும், அந்தக் காரை விரட்டிச் சென்று, காவல்கிணறு ரயில்வே கேட் அருகே மறித்தனர். அங்கு மாணவர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ராணுவ அதிகாரிகள் ராமசந்திரன் கேஸ்திரி, விவேக் கேயால் ஆகியோர் கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சுயம்புலிங்கம், மோகனுக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பும் வள்ளியூர் போலீஸில் புகார் கொடுத்தனர். டிஎஸ்பி சுப்பையா, பணகுடி இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை விசாரணை நடத்தினர். மாணவர்களைத் தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் மீதும், கார் மீது இடித்ததாக சரவணன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications