3 வயது சிறுமியிடம் சில்மிஷம்-வியாபாரி அடித்துக் கொலை
வந்தவாசி: 3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரைக் கொலை செய்த சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் (37). ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு பவித்ரா என்ற 3 வயது மகள் உள்ளாள்.
சம்பவத்தன்று பவித்ரா மற்ற குழந்தைகளுடன் தெருவில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (54) என்ற வியாபாரி அங்கு வந்துள்ளார்.
தன்னிடம் இருந்த சாக்லேட் மற்றும் இனிப்பை பவித்ராவுக்குக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் குழந்தையை அங்கிருந்து தூக்கிச் செல்லவும் முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மஞ்சுளா, இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தையை குப்புசாமியிடமிருந்து பறித்துள்ளார். மேலும்,அவருடன் சண்டை பிடித்துள்ளார்.
பிறகு தனது கணவரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினார். விரைந்து வந்த பூங்காவனம் குப்புசாமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கோபத்தில் அங்கிருந்த இரும்புக் குழாயை எடுத்து தலை மற்றும் முகத்தில் தாக்கினார். இதில் குப்புசாமி படுகாயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பூங்காவனத்தை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications