ஒசூரில் இருந்து கோடிக்கணக்கில் ரோஜா ஏற்றுமதி

Subscribe to Oneindia Tamil

Rose
ஒசூர்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி ஒசூரில் உள்ள டான்ஃபுளோரா மூலம் ரோஜா மலர்கள் கோடிக்கணக்கில் ஏற்றுமதியாக உள்ளன.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எம்.நஸீம் அஹமது அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனமும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அமுதகொண்டாப்பள்ளி கிராமத்தில் டான்ஃபுளோரா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

மொத்தம் 54 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா பயிர் சாகுபடி செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம், ஆண்டுக்கும் சுமார் 6.75 கோடி ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மொத்தமுள்ள 54 ஹெக்டேரை 25 பாகங்களாக பிரித்து தனித்தனியாக சாகுபடி செய்யப்படும் இந்த ரோஜாக்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக இந்திய மலர்களுக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வரவேற்பு அதிகமிருக்கும். உள்நாட்டிலும், டெல்லி, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் பூக்களின் தேவை வழக்கமாக அதிகளவில் இருக்கும்.

அழகுக்காகவும், அலங்காரத்துக்காகவும் வாங்கப்படும் பல்வேறு வண்ண மலர்களின் சாகுபடியும் இங்கு செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஏற்றமதி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் விவசாயிகளும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

டான்ஃபுளோரா திட்டத்தின் மூலமாக இந்தாண்டு இதுவரை 30 மில்லியன் ரோஜா தண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அடுத்தாண்டில் இது 70 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜா வளர்ப்பு குறித்து இங்குள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர் வெங்கடராஜேந்திர ரெட்டி கூறுகையில், 'நல்ல சத்துள்ள 1000 சதுரடி அளவுள்ள 'கிரீன் ஹவுஸ்' அமைப்பில் 6,000 செடிகளை வளர்க்கிறோம்.

இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பூக்கள் வளரும். ஒரு பூவுக்கு 3 ரூபாய் என வைத்துக்கொண்டாலும் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டமுடியும்' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+