கருணாநிதி-பாதுகாப்பு வேன் கவிழ்ந்து 2 போலீசார் காயம்
பெங்களூர்: பெங்களூரில் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்புக்குச் சென்ற கர்நாடக போலீஸ் வேன் கவிழ்ந்து இரு போலீசார் காயமடைந்தனர்.
முதல்வர் கருணாநிதி நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னைக்கு புறப்படுவதற்காக தனது மகள் செல்வி வீட்டிலிருந்து காலையில் கிளம்பினார் கருணாநிதி. அவரது காருக்குப் பின்னார் பாதுகாப்புக்கு கர்நாடக போலீசாரின் வாகனங்கள் உடன் சென்றன.
காலை 10.20 மணியளவில் யஷ்வந்தபூர் பாலத்தின் அருகே பாதுகாப்புக்கு வந்த வேன் கவிழ்ந்து. இதில் வேனில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் சென்னே கெளடா, கான்ஸ்டபிள் பத்ரிநாத் ஆகியோர் காயமடைந்தனர்.
இருவரும் லேசான காயங்களுடன் எம்.எஸ். ராமய்யா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கருணாநிதியின் பயணம் பாதிக்கப்படவில்லை. அவரும் நேற்று பிற்பகல் சென்னை வந்து சேர்ந்தார்.
கருணாநிதி பயணத்தில் 2வது விபத்து...
கடந்த 24ம் தேதி முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்தார். மகள் செல்வி வீட்டுக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஹெப்பால் பாலப் பகுதியில் அவரது வாகன வரிசையில் வந்த ஒரு வாகனம் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் தீயை அணைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications