சாமியார் 50 முறை கற்பழித்தார்- ஹேமலதா

Subscribe to Oneindia Tamil

Hemalatha
சென்னை: தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹேமலதா. இது உண்மையா என்று விசாரிக்க வேண்டுமானால் சாமியார் நிச்சயம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஹேமலதாவிடம் விசாரணை நடத்திய போலீசார் மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

ஆனால் சாமியார் ஸ்ரீகுமார் மட்டும் இதுவரை பலமுறை விசாரணைக்கு அழைத்தும் வராமல் டபாய்த்து வருகிறார். அவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீஸ் படை அங்கு சென்றது. ஆனால் அங்கிருந்து டெல்லிக்கு தப்பி ஓடி விட்டாராம் சாமியார். போலீஸ் படை வருவதை அறிந்ததும், ஹோட்டலில் தங்கியிருந்த சாமியார், அங்கிருந்து எஸ்கேப் ஆகி விமானம் மூலம் டெல்லிக்கு ஓடி விட்டாராம்.

விமான நிலையம் வரை போலீஸார் விரைந்து சென்றும் கூட பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியுள்ளனர்.

சாமியாரின் இந்த செய்கை போலீஸாரை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சாமியார் மத்திய அரசின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பதவியில் உள்ளார். இது சக்தி வாய்ந்த பதவி. அதை வைத்து போலீசாரை பயமுறுத்தி வருகிறார்.

விசாரணையின்போது ஹேமலதா சாமியார் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது உண்மையா என்று விசாரிக்க வேண்டுமானால் சாமியார் நிச்சயம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

பின்னர் என்னிடம் விசாரிக்காமல் போலீசார் நடவடிக்கை எடுத்துவிட்டனர் என்று சாமியார் புலம்பும் நிலை வந்துவிடக்கூடாது. அதேநேரம் இந்த வழக்கு தியாகராய நகர், கோட்டூர் புரம், அபிராமபுரம் உள்ளிட்ட 3 போலீஸ் நிலையம் சம்பந்தப்பட்டதாக உள்ளது.

ஏற்கனவே தாமதமாக விசாரணை நடந்து வருகிறது. நடவடிக்கையும் தாமதமாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+