மலேசியாவில் கொத்தடிமைகளாய் 14 வேலூர் இளைஞர்கள்!

வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி (55) என்பவர் அம்பல்லூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கருணாகரன் உள்ளிட்ட இரண்டு வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் ஏஜென்டுகள் தனது மகன் உள்ளிட்ட 14 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு 14 இளைஞர்களும் கொத்தடிமைகளைக சித்திரவதைக்குள்ளாகி வருகின்றனர். கருணாகரன் உள்ளிட்ட இரு ஏஜென்டுகளையும் கைது செய்து 14 இளைஞர்களையும் மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் கருணாகரனைக் கைது செய்தனர். அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனர்.
மாவட்ட எஸ்.பி. அருள்செல்வன் இதுகுறித்துக் கூறுகையில், ஒவ்வொரு இளைஞரும் ரூ. 2 லட்சம் பணத்தை கருணாகரன் உள்ளிட்ட இரண்டு ஏஜென்டுகளிடமும் கொடுத்துள்ளனர். நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இவர்களை மலேசியாவுக்கு அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications