விபத்து நஷ்டஈடு தராத 5 அரசு பஸ்கள் ஜப்தி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விபத்தில் இறந்த துறைமுக தொழிலாளியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் ஒரே நேரத்தில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். துறைமுக தொழிலாளியான இவர் கடந்த 2004ம் ஆண்டு புதூர் அருகே பைக்கில் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு மோதி இறந்தார்.

அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவரது மனைவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு போக்குவரத்து கழகம் ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

ஓராண்டுக்கு மேலாகியும் நஷ்டஈடு வழங்கப்படாததால் ஆறுமுகத்தின் மனைவி மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 5 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நீதிமன்ற அமீனா நாராயணன், மற்றும் ஊழியர்கள் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 4 அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஜப்தி வாரன்டை ஒட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+