போலீஸ் தேர்வில் முறைகேடு-விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கலில் போலீஸ் தேர்வில் நடந்த முறைகேடு செய்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், இரண்டு பணியாளர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த டி.ஐ.ஜி.சந்தீப் மித்தல் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கலில் நடந்த போலீஸ் தேர்வில் பணியாளர் தேன்மொழி, குளோரியா ஆகியோரின் மகன்கள் கயிறு ஏறும் தேர்வில் பங்கேற்கவில்லை. ஆனால், கயிறு ஏறியதாக முறைகேடாக பதிவு செய்யப்பட்டது.
இதற்கு உடந்தையாக இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் இருந்துள்ளார். சின்னச்சாமி எஸ்.பி. இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தினார். இதனால், இந்த மூன்று பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தற்போது இவர்களிடம் முறைப்படி துறை ரீதியான விசாரணை நடத்த டி.ஐ.ஜி. சந்தீப்மித்தல் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications