தமிழக பாஜக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன்

அக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் குரோம்பேட்டையில் இன்று நடந்தது. மாநிலத் தலைவரான இல.கணேசனின் 3 ஆண்டு பதவிகாலம் முடிவடைந்தையொட்டி புதிய தலைவர் தேர்வு நடந்தது.
அகில இந்திய பார்வையாளர் பல்பீர் குன்ஜ் முன்னிலையில் நடந்த இத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் இல.கணேசன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களும் நியமிக்கப்பட்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும், ரங்காத் மிஸ்ரா பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் அளத்தங்கரை கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 57. பி.ஏ, பி.எல். படித்துள்ள இவர் திருமணமாகாதவர்.
1989ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இவர் 1999ம் ஆண்டு தேர்தலும் வெற்றி பெற்று வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சரானார்.
தலைவர் பதவிக்கு எச்.ராஜாவும் போட்டியிட்ட நிலையில், அந்தப் பதவியைப் பிடித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications