சங்கரன்கோவிலில் மீண்டும் விசைத்தறியாளர் போராட்டம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பெரிய விசைத்தறிக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டாலும், சிறுவிசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டதை தொர்ந்து நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
சங்கரன்கோவிலில் பெரிய மற்றும் சிறு விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
18வது நாள் போராட்டத்தின் போது மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஜெயசிங்கன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 13 சதவீத ஊதிய உயர்வு என உடன்பாடு ஏற்பட்டது.
இது பெரிய விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தும் என்பதாலும், சிறு விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து உடன்பாட்டில் எவ்வித முடிவும் அறிவிக்காததாலும் குழப்பம் நீடித்து வந்தது.
இதனால் சிறு விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கும் 13 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும் வரை வேலைக்கு செல்வதில்லை என கூறி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications