எட்டயபுரம்: கோயிலுக்குள் பூசாரி கொலை

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இன்று காலை கோயிலுக்குள் புகுந்து கோயில் பூசாரி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த மாதுபட்டர் மகன் கண்ணன் பட்டர். திருமணமாகவில்லை. இவர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துசாமி தீட்சிதர் நினைவிடம் மற்றும் அதன் அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் பூஜை செய்து வந்தார்.

இன்று காலை 7 மணியளவில் கண்ணன் பட்டர் பூஜையை முடித்து விட்டு கோவில் வாளகத்தில் உள்ள மண்டபத்தில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் அவரை சராமரியாக கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

இதை கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். பூசாரி எதற்காக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+