இந்தோனேசியா-47 தமிழர்களும் கப்பலை விட்டு இறங்கினர்

Subscribe to Oneindia Tamil

Tamils on hunger strike
ஜகார்த்தா: இந்தோனேசியாவில், கப்பலில் இருந்து வந்த 78 இலங்கை அகதிகளில் ஏற்கனவே 31 பேர் ஓசியானிக் வைகிங் கப்பலை விட்டு இறங்கிச் சென்று விட்ட நிலையில் மீதமிருந்த 47 ஈழத் தமிழர்களும் கப்பலை விட்டு இறங்கி விட்டனர்.

47 பேரில், 16 பேர் ஆஸ்திரேலியாவுக்கும், 31 பேர் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களது புகலிட கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வேறு நாட்டில் குடியமர்த்தப்படுவர்.

கடந்த அக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி இந்த 78 தமிழர்களும் புகலிடம் கோரி வந்தனர். நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இவர்களை ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் மீட்டு தங்களது ஓசியானிக் வைகிங் கப்பலில் ஏற்றி இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களை ஐ.நா. அகதிகள் ஆணையம், உண்மையான அகதிகள் என அங்கீகரித்தது. இதையடுத்து 78 பேரும் கப்பலை விட்டு இறங்க சம்மதித்தனர்.

இதன் எதிரொலியாக, முதல் கட்டமாக 15 பேர் கப்பலை விட்டு இறங்கினர். அவர்களில் சிலர் ஆஸ்திரேலியாவுக்கும், சிலர் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர்.

பின்னர் மேலும் 16 பேர் கப்பலை விட்டு இறங்கினர். அவர்கள் இந்தோனேசியாவின் தன்சுங் பினாங்கில் உள்ள மையத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கப்பலில் மீதமிருந்த 47 பேரும் தற்போது கப்பலை விட்டு இறங்கி விட்டனர். அவர்களில் 16 பேர் நேற்று ஆஸ்திரேலியாவுக்கும், 31 பேர் ருமேனியாவுக்கும் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் வேறு நாட்டில் குடியமர்த்தப்படுவர் என்று இந்தோனேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டெகு பைசாஸ்யா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+