ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள்-தலித்துகளுக்கு வழங்க கோரி போராட்டம்
திருவண்ணாமலை: தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்களை தமிழக அரசு வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் மீட்டுக் கொடுக்காவிட்டால் ஜனவரி 26 ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தலித் விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் தலித் ஞானசேகரன் பேசுகையில், 'திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அப்பறபடுத்தி நிலம் இல்லாத அருந்ததியர் மக்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தலித் மக்கள் பயன்படுத்தும் சுடுகாடுகள் ஆக்கிரிமிப்பில் உள்ளன. இவற்றை மீட்டு தலித் மக்கள் பயன்பெறும் வகையில் கொடுக்க வேண்டும்.
இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக வருவாய் துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சமி நிலங்களை தமிழக அரசு ஜனவரி 25ம் தேதிக்குள் தலித் மக்களுக்கு மீட்டு கொடுக்காவிட்டால் ஜனவரி 26ம் தேதி மாவட்ட கலெகட்ர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்' என்றார்.












Click it and Unblock the Notifications