திண்டிவனத்தை தனி மாவட்டமாக்க போர்க்கொடி
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம் மாடவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை பிரித்து தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என நேற்று போராட்டம் நடந்தது. இந்நிலையில் அதே மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடு்த்துள்ளது.
திண்டிவனம் வக்கீல்கள் சங்க கூட்டம் தின்டிவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திண்டிவனத்தை தலைமையிடமாக கொண்டு திண்டிவனம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் நகல்கள் முதல்வர், கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், உயர்கல்வி துறை அமைச்சர், கலெக்டர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications