சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை காலி செய்யக் கோரும் வீட்டு ஓனர்
Subscribe to Oneindia Tamil

தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் ஸ்ரீகுமார் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு வருமாறு ஸ்ரீகுமாருக்கு பலமுறை அழைப்பு விட்டும் அவர் வராமல் எஸ்கேப் ஆகி வருகிறார்.
ஊர் ஊராக மாறி தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சாமியாரை தனது வீட்டிலிருந்து காலி செய்ய வைக்குமாறு கோரி போலீஸாரை அணுகியுள்ளார் ஸ்ரீகுமார் குடியிருந்து வீட்டின் உரிமையாளர்.
இதுகுறித்து அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை அணுகி கொடுத்துள்ள புகாரில், என்னுடைய வீட்டை காலி செய்துவிட்டு, சாமியாரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications