இந்தியா பாதுகாப்பானது-அமெரிக்காவுக்கு கிருஷ்ணா அறிவுரை
டெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்தானதல்ல, மாறாக பாதுகாப்பானதே. எனவே அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அபாயம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. அத்துடன் தெலுங்கானா பிரச்னை வலுத்து வருவதால் அம்மாநிலத்துக்கு செல்ல வேண்டாம். அதைப் பயன்படுத்தி அமெரிக்கர்களை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்றும் அது கூறியுள்ளது.
இதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளிக்கையில்,
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணிகள் தங்களது பாதுகாப்பு குறித்து பயப்படத் தேவையில்லை. இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படும் ஊக செய்திகளை புறக்கணித்துவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கானா விவகாரம் வெடித்த பின்னர் மிகக் குறுகிய காலத்தில் 3வது முறையாக அமெரிக்க அரசு தனது நாட்டினருக்கு இந்திய பயணம் குறித்து எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications