கச்சத்தீவை மீட்கும் போராட்டம்- 2 பேர் மட்டுமே வந்த அவலம்
சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டத்தில் வெறும் 2 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பேரவை சார்பில் இந்திய அரசு கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் தேதி காலை 10 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா.ஜனார்த்தனம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போராட்டம் நடந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படும் வகையில் வெறும் 2 பேர் மட்டுமே போராட்டத்திற்கு வந்திருந்தனர்.
உலகத்தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனம் தவதிர வேறு ஒருவர் மட்டுமே இதில் கலந்து கொண்டார்.
கச்சத்தீவுக்காக நடந்த இந்தப் போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள முன்வராதது ஜனார்த்தனத்திற்கு வருத்தத்தைக் கொடுத்தது. இருந்தாலும் அவர்கள் இருவர் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.
2 பேர் மட்டுமே நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் 5 பெண் போலீசார் மற்றும் 5 ஆண் போலீசார் காவலுக்கு நின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications