அறுவடைக் காலம் தொடங்கியது - அரிசி விலை குறைகிறது
சென்னை: நெல் அறுவடைக்காலம் தொடங்கி உள்ளதால் சென்னையில் அரிசி விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போனது. வெள்ளை பொன்னி அரிசி அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.38 முதல் ரூ.40 வரை விற்பனையானது.
இந்நிலையில், தற்போது தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், செஞ்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் புதுநெல் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் புது அரிசி விலை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பழைய அரிசி விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் சிவப்பு பொன்னி புது அரிசி 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,500க்கு விற்பனையானது, தற்போது ரூ.1,400 ஆகவும், ஒரு கிலோ சிவப்பு பொன்னி புது அரிசி ரூ.22க்கு விற்பனையானது, தற்போது ரூ.20 ஆகவும் விலை குறைந்துள்ளது.
டீலக்ஸ் பொன்னி புது அரிசி ஒரு மூட்டை ரூ.1,700க்கு விற்பனை செய்தது ரூ.1,600 ஆகவும், பாபட்லா பொன்னி அரிசி புது மூட்டை ரூ.1,900க்கு விற்றது ரூ.1,800 ஆகவும், வெள்ளை பொன்னி அரிசி மூட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்றது ரூ.1,900 ஆகவும் விலை குறைந்துள்ளது.
இதேபோல இட்லி புது அரிசி ஒரு மூட்டை ரூ.1,700க்கு விற்றது ரூ.1,600 ஆகவும், ஒரு கிலோ ரூ.24-க்கு விற்பனையானது, ரூ.22 ஆகவும் குறைந்துள்ளது.
பொன்னி பச்சரிசி 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,450க்கு விற்றது ரூ.1,350 ஆகவும், ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனையானது ரூ.28 ஆகவும், 25 கிலோ எடை கொண்ட டீலக்ஸ் பொன்னி அரிசி மூட்டை ரூ.650க்கு விற்பனையானது ரூ.600 ஆகவும் விலை சரிந்துள்ளது.
ஜெ.எல். பொன்னி புது அரிசி 25 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.600க்கு விற்பனையானது ரூ.550 ஆகவும், பாபட்லா பொன்னி அரிசி 25 கிலோ மூட்டை ரூ.700க்கு விற்பனையானது ரூ.650 ஆகவும், கர்நாடக ஸ்டீம் 25 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.750க்கு விற்றது ரூ.650 ஆகவும், வெள்ளை பொன்னி அரிசி 25 கிலோ கொண்ட மூட்டை ரூ.800க்கு விபற்னையானது ரூ.750 ஆகவும் குறைந்துள்ளது.
அடுத்த இரு வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நெல் அறுவடை தொடங்கிவிட்டால், அரிசி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications