அசாமில் ரயில் தடம் புரண்டது- 400 பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
ரங்கியா (அசாம்): அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டது. அதிருஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அசாமில் உள்ள ஹேலம் நகர் மற்றும் நிஜ் போகுவான் ரயில் நிலையங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது.
முர்கோங்சிலெக்-ரங்கியா என்ற இந்த பாசஞ்சர் ரயில் சுமார் 400 பயணிகளுடன் ரங்கியா நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போது அதிகாலை 3.47 மணிக்கு திடீரென தடம் புரண்டது.
இதில் ரயிலின் 7 பெட்டிகள் சேதமடைந்தன. எனினும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications