அண்ணனை அடித்து விரட்டி விட்டு தங்கையைக் கற்பழித்த கொடூரர்கள்
சேலம்: அண்ணனுடன் வந்த இளம் பெண்ணை 2 இளைஞர்கள், வழிமறித்து அண்ணனை அடித்து படுகாயப்படுத்தி விரட்டி விட்டு அந்தப் பெண்ணைக் கொடூரமாகக் கற்பழித்து உடல் முழுவதும் காயப்படுத்திய கொடுமைச் சம்பவம் சேலம் அருகே நடந்துள்ளது.
சேலம் அருகே உள்ள மன்னார்பாளையம் பகுதியை சேந்தவர் ராஜூ. இவரது மனைவி தனபாக்கியம். ராஜு இறந்து விட்டார். இவர்களுக்கு விஜயா, ராமர் என இரு குழந்தைகள்.
19 வயதான விஜயா அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தறி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு வேலை முடித்து விட்டு இரவு எட்டரை மணியளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் விஜயா.
அப்போது வழியில் ராமர் பைக்கில் வரவே, தங்கையை பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
தாதம்பட்டி வழியாக மன்னார்பாளையம் பிரிவு ரோடு அருகே இருளான ஒரு இடத்தி்ல் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென ராமனைத் தாக்கினர். இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் விஜயாவையும் அந்த நபர்கள் தாக்கினர்.
இருவர் மீதும் சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதில் இருவரும் வலி தாங்க முடியாமல் அலறினர்.
பின்னர் அந்த இருவரும், விஜயாவை அருகில் உள்ள புதர்ப் பகுதிக்குக் கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்தனர். மேலும், விஜயாவின் உடல் முழுவதும் கடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அவரது வலது கண்ணை கல்லால் அடித்துக் காயப்படுத்தினர்.
தங்கையைக் காப்பாற்ற முடியாமல் படுகாயத்துடன் துடித்த ராமன் அருகில் உள்ள ஊருக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி மக்களைத் திரட்டிக் கொண்டு வந்தார். மக்கள் வருவதைப் பார்த்ததும் காம வெறியர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் ஊர் மக்கள் அவர்களைப் பிடித்து மடக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆனாலும் இருவரும் அங்கிருந்து சாதுரியமாக தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து ராமன் மற்றும் விஜயாவை சேலம் அரசு மருத்துமனைக்கு மக்களே கொண்டு போய்ச் சேர்த்து விட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
படுகாயமடைந்த விஜயாவின் வலது கண் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இரு வாலிபர்களும் வந்த மோட்டார் சைக்கிள் மட்டும் சிக்கியுள்ளது. அதைக் கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு வெறியர்களையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications