தமிழகத்தில் பாரத மாதா சிலை-இ.முன்னணி கோரிக்கை
சென்னை: புதுச்சேரியில் இருப்பது போல் தமிழகத்திலும் பாரத மாதா சிலை நிறுவ வேண்டும் என்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் 36 அடி உயரமும், 11 டன் எடையும் கொண்ட சிங்கத்துடன் கூடிய பிரமாண்டமான பாரத மாதா சிலையை கம்பீரமாக நிறுவியுள்ளனர்.
இதைக்காணுபோது இளைஞர்களிடம் தேசபக்தி உணர்வும், செயல் ஊக்கமும் வெளிப்படும் என்பது உறுதி. இந்த சிலையை நிறுவ முன்வந்த அனைவரையும் பாராட்டுகிறோம்.
இதுபோல் தமிழகத்திலும் பாரத மாதா சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும். இங்கு தான் தியாகி சுப்ரமணிய சிவா தனது எஞ்சிய நாளில் பாரத மாதா கோயில் கட்டவும், சிலையை நிறுவவும் பாடுபட்டார்.
இதனை முதல்வர் கருணாநிநி கவனத்தில் கொண்டு பாரத மாதாவின் வடிவத்தை நிறுவிட முன்வர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications